search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சரத் யாதவ்"

    பட்டேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கக்கோரி இன்று 15-வது நாளாக தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள ஹர்திக் பட்டேலை மத்திய முன்னாள் மந்திரி ஆ.ராசா இன்று சந்தித்தார். #HardikPatel #fastforquota
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில் பட்டேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டிடார் அனாமத் அன்டோலன் சமிதி என்ற இயக்கத்தின் தலைவர் ஹர்திக் பட்டேல் கடந்த மாதம் 25-ம் தேதியில் இருந்து மீண்டும் தொடர்ச்சியாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். 

    இதற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அவரது போராட்டம் நேற்று 13-வது நாளாக நீடித்த நிலையில் நாளும் சாப்பிடாததால் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதனால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

    காந்திநகர் பகுதியில் உள்ள எஸ்.ஜி.வி.பி. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஹர்திக் பட்டேல் அங்கும் தனது உண்ணாவிரதத்தை இன்று பதினைந்தாவது நாளாக தொடர்ந்து வருகிறார்.

    இந்நிலையில், லோக்தந்திரிக் ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ் மற்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், மத்திய முன்னாள் மந்திரியுமான ஆ.ராசா உள்ளிட்டோர் இன்று மருத்துவமனைக்கு சென்று ஹர்திக் பட்டேலை சந்தித்தனர். #HardikPatel #fastforquota
    தலைநகர் டெல்லியில் 16-ந் தேதி எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தை முன்னாள் மத்திய மந்திரியும், லோக்தந்திரிக் ஜனதாதள கட்சி தலைவருமான சரத் யாதவ் கூட்டி இருக்கிறார்.
    புதுடெல்லி :

    அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில் ஆளும் பாரதீய ஜனதா கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றுதிரட்டும் முயற்சிகள் நடந்து வருகின்றன. அந்த வகையில் தலைநகர் டெல்லியில் 16-ந் தேதி எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தை முன்னாள் மத்திய மந்திரியும், லோக்தந்திரிக் ஜனதாதள கட்சி தலைவருமான சரத் யாதவ் கூட்டி இருக்கிறார்.

    இது தொடர்பாக நேற்று அவர் ஒரு அறிக்கை விடுத்து உள்ளார்.



    அந்த அறிக்கையில் அவர், ‘‘இந்த கூட்டத்தில் கிட்டத்தட்ட அனைத்து கட்சி தலைவர்களும் கலந்து கொள்வார்கள். அவர்களில் சிலரிடம் நான் பேசி உள்ளேன்’’ என கூறி உள்ளார்.

    மேலும், அரசியல் சாசனத்தை பாதுகாக்கவும், நாட்டு மக்களை காக்கவும் தேவையான முக்கிய விவகாரங்களை விவாதிப்பதற்கு இந்த கூட்டம் வாய்ப்பாக அமையும் என சரத் யாதவ் குறிப்பிட்டு உள்ளார்.

    நாட்டின் பல்வேறு இடங்களில் சரத் யாதவ் இதற்கு முன் கூட்டிய இத்தகைய கூட்டங்களில் அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் கலந்து கொண்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
    மத்திய பா.ஜ.க அரசு அமல்படுத்திய பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி.யால் 8 கோடி பேர் வேலை இழந்துள்ளதாக சரத் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார். #SharadYadav #GST
    பாட்னா:

    லோக்தந்திரிக் ஜனதா தள கட்சியைச் சேர்ந்த சரத் யாதவ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி போன்ற திட்டங்கள் நாட்டுக்கு நன்மை விளைவிக்கும் எனக்கூறி மோடி அறிவித்தார். ஆனால், அவர் கூறியதற்கு எதிராகவே நடந்துவருவதாகவும், இந்த திட்டங்களுக்கு அடிப்படை முன்னேற்பாடு எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

    பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி போன்றவற்றால் விவசாயிகளும், இளைஞர்களும் அதிக அளவில் துன்பப்பட்டதாகவும், அதனை நிவர்த்தி செய்ய மத்திய அரசு முயற்சி எடுக்கவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

    தொடர்ந்து பேசிய அவர், இந்த இரண்டு திட்டங்களுமே சிறு வணிகர்களுக்கு மிகவும் சிரமம் அளித்ததாகவும், அதனால் அவர்களின் வணிகத்தை குறைப்பது அல்லது கைவிடுவதை தவிர வேறு வழியில்லாமல் போனதாகவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், பண மதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டியால் 7 முதல் 8 கோடி பேர் வரை வேலை இழந்துள்ளதாகவும், இந்த நிலையில் ஜி.எஸ்.டியின் ஓராண்டு வெற்றியை மோடி அரசு கொண்டாடிவருவது உண்மைக்கு எதிரானது என்றும் சரத் யாதவ் தெரிவித்துள்ளார். #SharadYadav #GST
    ஐக்கிய ஜனதா தளத்தின் முன்னாள் தலைவர் சரத்யாதவ் ஜூலை 12-ம் தேதி வரை தற்போது வசிக்கும் அரசு பங்களாவை பயன்படுத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. #SharadYadav
    புது டெல்லி :

    பீகார் முதல்வர் நிதீஷ்குமார் கடந்த ஆண்டு பாஜவுடன் இணைந்து புதிய ஆட்சி அமைத்தார். இதற்கு ஐக்கிய ஜனதா தள கட்சியின் மூத்த தலைவர் சரத் யாதவ் எதிர்ப்பு தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து, ஐக்கிய ஜனதா தளத்தின் முன்னாள் தலைவர் சரத்யாதவை மாநிலங்களவை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து கடந்த டிசம்பர் மாதம், அக்கட்சியின் மாநிலங்களவைத் தலைவர் ராம்சந்திர பிரசாத் சிங் உத்தரவிட்டார். இதற்கு தடை விதிக்கக்கோரி சரத்யாதவ் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

    இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை. அதே நேரம்,  எம்.பி. என்கிற முறையில் சரத்யாதவ் அரசு ஊதியத்தையும், சலுகைகளையும் பெற்றுக் கொள்ளலாம் எனவும், தனக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களாவில் அவர் தொடர்ந்து வசிக்கலாம் என்றும் உத்தரவு பிறப்பித்தது.

    ஆனால், இதை எதிர்த்து ஐக்கிய ஜனதாதளத்தின் தலைவர் சந்திரா, சரத் யாதவ் அரசு பங்களாவை காலி செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை சற்று மாற்றி அமைத்து தீர்ப்பளித்துள்ளது. 

    அதன் அடிப்படையில், சரத் யாதவிற்கு அரசு ஊதியம், ரயில் மற்றும் விமான சேவைகளில் வழங்கப்படும் சலுகைகளை நீக்கி உத்தரவிட்டுள்ளது. அதே சமயம், இம்மாதம் 12-ம் தேதி வரை அவர் அரசு பங்களாவில் வசிப்பதற்கு தடை ஏதும் இல்லை எனவும் நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.  #SharadYadav 
    ×